திருமலையில் பெண் நாவிதர்கள் நியமனம்?
ADDED :3849 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், பெண் நாவிதர்களை நியமிக்க உள்ளது. திருமலையில், 200 நாவிதர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுடன் கூடுதலாக, 100 பேர் இலவச சேவை செய்கின்றனர். கோடை விடுமுறையில், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அவர்களில், 75 சதவீதம் பேர் முடி காணிக்கை செலுத்துவர். அதில், பெண்கள், குழந்தைகள், அதிக அளவில் இருப்பர். எனவே, கூடுதலாக, 100 பெண் நாவிதர்களை தேவஸ்தானம் தேர்வு செய்ய உள்ளது. திருமலையில், அவர்களுக்கு செயல்திறன் தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படுவோர், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், திருமலையில் இலவசமாக சேவை செய்வர். இத்தகவலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.