உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 29ல் அய்யப்பன் கோவிலில் சங்காபிஷேக விழா

29ல் அய்யப்பன் கோவிலில் சங்காபிஷேக விழா

கடம்பத்துார்: கடம்பத்துார் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலில், வரும் 29ம் தேதி, 108 சங்காபிஷேகமும், கும்பாபிஷேக நிறைவு விழாவும் நடக்கிறது. கடம்பத்துார் அடுத்த, கசவநல்லாத்துார் ஏகாத்தம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில், கடந்த பிப்., 9ம் தேதி, மகாகும்பாபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. இதையடுத்து, மண்டலாபிஷேக நிறைவு விழாவும், 108 சங்காபிஷேகமும், வரும் 29ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9:00 மணிக்கு, 108 சங்கு பூஜையும், விசேஷ ஹோமங்களும் நடைபெறும். அதன்பின், காலை 10:15 மணிக்கு, பூர்ணாஹூதி நடைபெறும். அதை தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, 108 சங்காபிஷேகமும், 11:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !