திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா
ADDED :3849 days ago
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகிஅம்மன் கோயில் பங்குனி திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்மன் வீதியுலா வருகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி பகல் 11 மணி முதல் 12 மணி வரை திருக்கல்யாணம், 2ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.