உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தேஸ்வரர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

ஆனந்தேஸ்வரர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை : மதுரை எல்லீஸ்நகர் யமுனா வீதி ஆனந்தேஸ்வரர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை(மார்ச் 25) நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 7 மணிக்கு மேல் மகாசங்கல்பம், மாலை 5 மணிக்கு மேல் வேதகோஷம், இரவு 7 மணிக்கு விக்ரஹ பிரதிஷ்டை நடக்கிறது.நாளை காலை 9.30 முதல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் ஆஸ்தீக சபா தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சேதுவெங்கட்ராமசர்மா, பொருளாளர் ஹரிஹரசுப்ரமணியன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !