உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநவமி உற்சவ விழா: மார்ச் 28ல் தொடக்கம்

ராமநவமி உற்சவ விழா: மார்ச் 28ல் தொடக்கம்

காரிமங்கலம்: காரிமங்கலம், அக்ரஹாரம் ராமர் கோவிலில் ராம நவமி விழா வரும், 28ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 9ம் தேதி வரை நடக்கிறது. வரும், 28ம் தேதி காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 29ம் தேதி முதல், 4ம் தேதி வரை தினமும் காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. 5ம் தேதி சிறப்பு அபிஷேகமும், மாலை, 6 மணிக்கு மேல் ஸ்வாமி திருக்கல்யாணமும், 6ம் தேதி வசந்த உற்சவமும், 7ம் தேதி வசந்த மண்டபத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், 8ம் தேதி சயன உற்சவமும், 9ம் தேதி அனுமன் உற்சவமும் நடக்கிறது.ஏற்பாடுகளை தூர்வாசர், உதயசங்கர், அரிஹரன், கணேஷ், ஸ்ரீதர் ஆகியோர் செய்துள்ளனர்.* தர்மபுரி, எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில் ராமநவமியை முன்னிட்டு வரும், 28ம் தேதி காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 29ம் தேதி மாதவாச்சாரியார் திருமண மண்டபத்தில் காலை, 9 மணிக்கு சீதா ராம திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு திருக்கல்யாண கோலத்தில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் வாசுதேவன் மற்றும் சத்தியநாராயணன், கிருஷ்ணன், சிவராஜ், கேசவன், லோகமூர்த்தி, ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !