சாய்பாபா தரிசன மைய துவக்க விழா
ADDED :3855 days ago
மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலம், ஸ்டேஷன் ரோடு, பாண்டியன் ஹாலில் அமைந்துள்ள, பச்சை நிற மரகத சாய்பாபா தரிசன மைய இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற உள்ளது. இரண்டு நாள் நடக்கும் இந்த விழாவில், மார்ச் 27ம் தேதி, காலை 8:00 மணி முதல், மாலை 6:30 மணி வரை, ஆரத்தி, அஷ்டபதி பஜனை, சிறப்பு சத்சங்கம் போன்ற வைபவங்கள் நடக்க உள்ளன. இரவு, 8:00 மணிக்கு நடைபெறும், வீரமணி ராஜூவின் இன்னிசை நிகழ்ச்சியுடன், முதல் நாள் விழா முடிகிறது. இரண்டாம் நாளான, 28ம் தேதி காலை 7:00 மணி முதல், ஆரத்தி, ஸ்ரீராம நவமி பூஜை, ராமர் சீதா திருக்கல்யாண மகோற்சவம் மற்றும் பச்சை நிற மரகத சாய்பாபா ஊர்வலத்துடன், விழா நிறைவு பெறும். இரு தினங்களிலும், பச்சை நிற மரகத சாய்பாபா தரிசனத்தின் போது, பக்தர்கள் பூக்கள் கொண்டு தங்கள் கைகளாலேயே மலர் பூஜை செய்யலாம்.