உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் பவனி!

சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் பவனி!

காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூரிய பிரபை வாகனத்தில் நேற்று வலம் வந்தார். காஞ்சிபுரம், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா, நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, காலை 9:30 மணியளவில், சூரிய பிரபை வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, ராஜவீதிகளை வலம் வந்தார். ஏலவார் குழலி, சப்பரத்தில் உடன் வந்தார். இரவு, சந்திர ஏகாம்பரநாதர், பிரபை வாகனத்திலும்; அம்பிகை, அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !