உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி செம்பாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

செஞ்சி செம்பாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

செஞ்சி: செஞ்சி தாலுகா பொன்பத்தி செம்பாத்தம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  24ம் தேதி காலை 6  மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், கோபூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு முதல் யாக பூஜை, வாஸ்து சாந்தி,  பிரவேசபலி, காப்பு கட்டுதல், 108  திரவிய ஹோமம் நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், 108 மூலிகை  சாமான் திரவிய ஆகுதி, ஸ்பரிச ஆகுதி, தீபாராதனை, யாத்திர தானம் நடந்தது. 9.20 மணிக்கு கலச புறப்பாடும் 9.30 மணிக்கு விமான கும்பாபி÷ ஷகமும்,  விநாயகர், செம்பாத்தம்மன், பச்சையம்மன், சப்த கன்னிமார்கள், யோக முனீஸ்வரர், பால முருகனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.  கும்பாபிஷேகத்தை விளாத்திகுளம் சிவா குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !