உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி திரிகால ஞானேசர் கோவில் கும்பாபிஷேகம்!

காஞ்சி திரிகால ஞானேசர் கோவில் கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள, திரிகால ஞானேசர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் பேருந்து  நிலையத்தில் பழமையான திரிகால ஞானேசர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவிலுக்கு, 12  ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த, நிர்வாகம் தீர்மானித்து, திருப்பணிகள்  நடைபெற்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின.  தொடர்ந்து, நேற்று காலை 9:45 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில்,  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பரீத்தீஸ்வரர் கோவில் சூரிய பகவான் வழிபட்ட தலமாக கருதப்படும், பருத்திகுளம் பகுதியில்  உள்ள பரீத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை  நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !