உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா!

அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா!

விருதுநகர்: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாடார்கள் உறவின் முறை பொது அபிவிருத்தி டிரஸ்டிற்கு பாத்தியப்பட்ட இக் கோயிலில் அன்று இரவு 7.40மணிக்கு கொடியேற்றப்படுகிறது. இதை தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான ஏப்.,7 அன்று பொங்கல் விழா , 8 அன்று பூக்குழி நடக்கிறது. ஏப்.,15ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !