ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேர் திருவிழா துவக்கம்!
ADDED :3848 days ago
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆதி பிரம்மா திருநாளான பங்குனி தேரோட்டம் திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையெட்டி, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து, அதிகாலை, 3.15 மணிக்கு புறப்பட்டு, கொடியேற்ற மண்டபம் சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 5 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர். காலை, 6.30 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன், திருச்சிவிகையில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வவந்தார்.ஏப்ரல், 4ம் தேதி அதிகாலை, 3.30 மணிக்கு மூன்றாம் ஏகாந்தம் முடிந்த பின், நம்பெருமாள் தாயார் சன்னதியிலிருந்து புறப்பட்டு தேருக்கு வருகிறார். காலை, 7.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.