உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய, சந்திர வட்ட வாகனங்களில் கபாலீஸ்வரர் வீதியுலா!

சூரிய, சந்திர வட்ட வாகனங்களில் கபாலீஸ்வரர் வீதியுலா!

மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று, சூரிய, சந்திர வட்ட வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்தது. மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாம் நாள் விழாவில், காலை 9:30 மணிக்கு, சூரிய வட்ட வாகனத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளினார். கற்பகாம்பாள், சிங்காரவேலர், நடன விநாயகர், சண்டேசர் ஆகிய மூர்த்திகளும் வீதியுலா வந்தனர். இரவு 9:00 மணிக்கு சந்திர வட்டம் வாகனத்தில், கபாலீஸ்வரரும், கிளி வாகனத்தில் கற்பகாம்பாளும், அன்ன வாகனத்தில் சிங்காரவேலரும் வீதியுலா வந்தனர். இன்று காலை 6:00 மணிக்கு அதிகார நந்தி காட்சி நடக்கிறது.

இன்றைய விழா

காலை 6:00 மணி அதிகார நந்தி திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்ளி ரிஷப வாகனங்கள்
இரவு 9:00 மணி பூதன், பூதகி, தாரகாசுர வாகனம்

நாளைய விழா

காலை 8:30 மணி புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்கள்
இரவு 9:00 மணி நாகம், காமதேனு, ஆடு வாகனங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !