உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் ஜரூர்!

வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் ஜரூர்!

விழுப்புரம்: பொய்யப்பாக்கம்  லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணிகள் நடக்கிறது. விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் கிராமத்தில்  லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவில்  1500 ஆண்டுகள் பழமையானது. சகஸ்ரநாமம், திருமஞ்சனம், திருக்கல்யாணம், பவித்ர உற்சவங்கள், வாகன வீதியுலா நடக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக சம்ப்ரோக்ஷனம் நடக்காமல் இருந்த கோவில் வரும் மே மாதம்  மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனால் கோவிலில் கோபுரங்கள், மடப்பள்ளி கதவுகள், நுழைவு வாயில், ஹோம குண்டங்கள் மற்றும் சுவாமி சிலைகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகின்றன. ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நடக்கும்  பணிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் முடியும்.  சம்ரோக்ஷணம் மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை  லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கைங்கரிய டிரஸ்ட் ஸ்ரீதரன் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !