ஏகாம்பரநாதர் கோவிலில் அறுபத்துமூவர் உற்சவம் கோலாகலம்!
ADDED :3903 days ago
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், நேற்று காலை அறுபத்து மூவர் உற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவில், நேற்று காலை, அறுபத்து மூவர் உலா சிறப்பாக நடந்தது.கோவிலில் இருந்து, ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் முன்னால் செல்ல, அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் பின் தொடர்ந்தனர்.முன்னதாக, நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், ஏலவார்குழலி யுடன் ஏகாம்பரநாதர், கைலாசபீட இராவண வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதிகளில் வலம் வந்தார்.அப்போது, கண்ணை கவரும் வாண வேடிக்கை நடத்தி, வரவேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஏகாம்பரநாதரை தரிசனம் செய்தனர்.