தர்மபுரி ஆஞ்சநேயர் கோவிலில் கல்யாண உற்சவ விழா
ADDED :3849 days ago
தர்மபுரி: தர்மபுரி எஸ்.வி., ரோடு, ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ராமநவமியை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் சார்பில், மாதவாச்சாரி திருமண மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சீதா ராம கல்யாண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கல்யாண கோலத்தில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் ஆச்சார் சத்தியநாராயணன், குருக்கள் வாசுதேவன், கிருஷ்ணன், சிவராஜ், கேசவன், லோகமூர்த்தி ஆகியோர் செய்தனர்.
* தர்மபுரியை அடுத்த, வெங்கடம்பட்டியில் சீதாராமருக்கு கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.