பவளமலையில் 3ம் தேதி பங்குனி உத்திர விழா!
ADDED :3904 days ago
கோபி: கோபி பவளமலையில் முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர விழா வரும் மூன்றாம் தேதி நடக்கிறது.காலை ஏழு மணிக்கு மூலவர் மகன்யாச அபிஷேகம், 7.30 மணிக்கு அலகு குத்துதல், காவடி எடுத்தல், ஒன்பது மணிக்கு காவடி அபிஷேகம், காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமணிய சுவாமிக்கு கல்யாண உற்சவம், பகல் 11 முதல் மூன்று மணி வரை அன்னதானம். மாலை ஆறு மணிக்கு முத்துக்குமார சுவாமி திருவீதி உலா நடக்கிறது.தக்கார் மாலா, செயல் அலுவலர் பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.