உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம அனுமன் கோவிலில் ராம நவமி உற்சவம்!

ராம அனுமன் கோவிலில் ராம நவமி உற்சவம்!

பரங்கிப்பேட்டை: பு.முட்லூரில் உள்ள ராம அனுமன் கோவிலில் ராம நவமி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி நேற்று  முன்தினம் ராம அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு ராம நவமி விழா துவங்கி  பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று இன்றைய வாழ்க்கை முறைக்கு ராமாயணம் பொருந்துமா, பொருந்தாதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந் தது. தொடர்ந்து இசை நிகழ்ச்சியும், சொற்பொழிவு மற்றும் ஸ்ரீ மத் ஸ்ரீ சம்பூர்ண ராமாயணம் நாடகமும் நடக்கிறது. 7ம் தேதி ஸ்ரீ சீத்தா ராமர் பட்டா பிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராம அனுமன் அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !