நீலமங்கலத்தில் ராமநவமி வைபவம்
ADDED :3849 days ago
கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் ராமநவமி வைபவம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சீதாலஷ்மண அனுமன் சமேத கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா நடந்தது. காலையில் விஸ்வரூப தரிசனத்திற்கு பின் மூலவர், உற்சவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்து வைக்கப்பட்டது.அலங்கார தீபங்கள் காண்பித்தப்பின், சோடஸ உபச்சாரம் நடத்தினர். ராம பக்தர்கள் நாம சங்கீர்த்தனம் பாடினர். பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ராமராஜன் செய்திருந்தார்.