உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரிமுனையில் தேரோட்டம்: 63 நாயன்மார் உற்சவம்!

பாரிமுனையில் தேரோட்டம்: 63 நாயன்மார் உற்சவம்!

பாரிமுனை: பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று தேரோட்டம்  நடந்தது. மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை, 63 நாயன்மார் உற்சவம் நடந்தது. பாரிமுனை தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் தேரினில் வீற்றிருக்க, தங்கசாலை, லக்குமணதாஸ் சாலை, நைனியப்பன் சாலை வழியாக தேர் சென்றது. விழாவில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் திரளாக பங்கேற்று தேரினை வடம் பிடித்து சென்றனர்.மண்ணடி, லிங்கி செட்டி தெருவில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவில் நேற்று இரவு, 7:00 மணியளவில், 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. உற்சவ மூர்த்தி வெள்ளி ரிஷப வாகனத்தில் செல்ல, அவரை தரிசித்தபடியே முன்னால், 63 நாயன்மார்களும் வீதியுலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !