ஏப்.9ல் லட்சுமி வராஹப் பெருமாள் கோயில் மஹோத்ஸவம்!
ADDED :3843 days ago
மதுரை : மதுரை- மேலுார் ரோடு கொடிக்குளம் அருகே ஏ.பி., டவுன்ஷிப் அயிலாங்குடி கிராமத்தில் லட்சுமி வராஹ பெருமாள் கோயிலின் ஜெயந்தி மஹோத்ஸவம் ஏப்.9ல் நடக்கிறது. அன்று காலை சுப்ரபாதம் விஸ்வரூபத்துடன் நிகழ்ச்சி துவங்கி, சந்தி திருவாராதனம், பூர்ணாஹூதி திருமஞ்சனம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி செயலாளர் சுவாமி நியமானந்தா ஆசியுரை வழங்குகிறார். பகல் 12.30 மணிக்கு அலங்கார திருவாராதனம் மற்றும் உச்சிகால பூஜையும், அலங்கார சாற்றுமுறை நடக்கிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.