காளிப்பட்டி கந்தசாமி கோவில் பங்குனி உத்திரத்திருவிழா
ADDED :3840 days ago
ஆட்டையாம்பட்டி : ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வரும், 3ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று மாலை 3 மணிக்கு தீர்த்த காவடிகள் ஆற்றுக்கு புறப்பாடு நடைபெறுகிறது. மாலை, 6 மணிக்கு ஆற்றில் இருந்து தீர்த்த காவடிகள் ஊர்வலம் நடைபெறும். நாளை காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து விசேஷ அலங்காரத்துடன், தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு வாணவேடிக்கையுடன் ஸ்வாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பூசாரி அம்பிகா தேவி மற்றும் செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.