உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரஆஞ்சநேயர் கோவில் ஏப்., 5ல் குண்டம் விழா!

வீரஆஞ்சநேயர் கோவில் ஏப்., 5ல் குண்டம் விழா!

ராசிபுரம் : மெட்டாலா வீரஆஞ்சநேயர் கோவிலில், வரும், 5ம் தேதி குண்டம் இறங்கும் விழா
கோலாகலமாக நடக்கிறது.

ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் பிரசித்தி பெற்ற வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் விழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, நாளை (ஏப்., 4) துவங்குகிறது. காலை, 10 மணிக்கு, ஆஞ்சநேயர் ஸ்வாமி, சீராப்பள்ளி செவ்வந்தீஸ்வரர் கோவிலில் இருந்து, நாமகிரிப்பேட்டை எழுந்தருளுகிறார்.

அன்று இரவு, 7 மணிக்கு திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5ம் தேதி, காலை, 8 மணிக்கு, நாமகிரிப்பேட்டையில் இருந்து, வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி மெட்டாலா கோவில் வந்தடைகிறார். காலை, 10 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

பகல், 1 மணிக்கு மெட்டாலா கன்னிமார் ஊற்றில் இருந்து, ஸ்வாமி சக்தி அழைத்தல், மாலை, 4 மணிக்கு கோவில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

மேலும், பொங்கல் வைத்து ஸ்வாமிக்கு படையலிடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !