பார்வை இல்லாதவர்கள் படிக்கும் ராமாயணம்!
ADDED :3949 days ago
திருப்பதி: திருமலை தேவஸ்தானம் சார்பில் பார்வை இல்லாதவர்கள் படிக்ககூடிய பிரெய்லி முறையில் அமைந்த ராமாயணம் புத்தகம் வெளியிடப்பட்டது.ஏற்கனவே பாரதம்,பாகவதம் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது மூன்றாவது புத்தகமாகும். ஐதராபாத்தைச் சேர்ந்த தேவனார் அமைப்புதான் இந்த புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது, அந்த அமைப்பினை பாராட்டுவதாக புத்தகத்தை வெளியிட்ட நிர்வாக அதிகாரி சாம்பவசிவராவ் குறிப்பிட்டார்.