இன்று சந்திர கிரகணம்: நடை திறப்பு நேரம் மாற்றம்!
ADDED :3950 days ago
சந்திர கிரகண நிகழ்வு காரணமாக, கோவில்களில் நடை திறப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி, இன்று மதியம், 3:45 மணிக்கு சந்திர கிரகணம் துவங்கி, இரவு, 7:15 மணிக்கு நிறைவடைகிறது. அஸ்த நட்சத்திரம், கன்னி ராசியில் கிரகணம் ஏற்படுகிறது. இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறியுள்ளனர். சந்திர கிரகணத்தால், கோவில்களில், நடை திறப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காலை வழக்கமான நேரத்துக்கு, கோவில் நடை திறக்கப்பட வேண்டும். மதியம் நடை சாத்திய பின், கிரகணம் முடிந்து, இரவு, 7:15 மணிக்கு பின், கோவிலை சுத்தப்படுத்தி, பரிகார பூஜை செய்த பின், 8:00 மணிக்கு நடை திறந்து வழிபாடு மேற்கொள்ளலாம், என, குறிப்பிடப்பட்டுள்ளது. - நமது நிருபர் -