மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்... கோலாகலம்!
புதுச்சேரி:மணக்குள விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர் கள் குவிந்ததால், புதுச்சேரி நகரம் விழாக்கோலம் பூண்டது.புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் அமைந்துள்ள, மணக்குள விநாயகர் கோவில் பழமையும், பெருமையும் வாய்ந்தது.
இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் குவிகின்றனர்.ரூ.6 கோடியில் திருப்பணிபுதுச்சேரி மக்களின் இஷ்ட தெய்வமான மணக்குள விநாயகருக்கு, கடந்த 1999ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால், ரூ.6 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.சொர்ண பந்தனம் திருப்பணிகள் நிறைவுபெற்று, யாகசாலை பூஜைகள், கடந்த 30ம் தேதியன்று துவங்கியது. ௧௦௦ சிவாச்சாரியார்கள் பங்கேற்று பூஜைகளை மேற்கொண்டனர்.மூலவர் விக்ரக பீடத்தில் அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு, அதற்குமேல் தங்கத்தால் சொர்ண பந்தனம் செய்யப்பட்டது.
மகா ும்பாபிஷேகம்: யாகசாலையில் நேற்று காலை 5:00 மணிக்கு, ஆறாம்கால யாக பூஜை நடந்தது. 9:00 மணியளவில், யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடானது. சரியாக 9:25 மணிக்கு, முதல்வர் ரங்கசாமி தலைமையில், மூலவர் விமான தங்க கலசத்தில், கணேஷ் மற்றும் குமார் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.பின், ராஜகோபுர கலசங்கள், கோவில் முன்மண்டப கோபுர கலசங்கள், பாலவிநாயகர், பாலசுப்ரமணியர் சன்னதி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. திருக்கல்யாண உற்சவம்கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலையில், திருக்கல்யாண மண்டபத்தில், சித்தி புத்தி விநாயகருக்கும், வள்ளி தேவசேனா சுப்ரமணியருக்கும் திருக்கல்யாண வைபவமும், மணக்குள விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது.விழாவில் சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், பாலன், நேரு, வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, கலெக்டர் சுந்தரவடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் குவிந்தனர்கும்பாபிஷேக விழாவில், புதுச்சேரி மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். கடலூர், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.கும்பாபிஷேக ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.