அழகிய மணவாள ரங்கநாதப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3898 days ago
திருப்புவனம்: திருப்புவனம் அழகிய மணவாள ரங்கநாதப்பெருமாள் கோயிலில் நேற்று பங்குனி திருக்கல்யாணம் நடந்தது. திருப்புவனம் ரங்கநாதபெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாத பெருமாள் பூதேவி,ஸ்ரீதேவி மற்றும் ரங்கநாயகியுடன் எழுந்தருளினார். காலை 10.15 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பெருமாளுக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.