ராகவேந்திரர் கோவிலில் சத்தியநாராயணா பூஜை!
ADDED :3839 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவில் பவுர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி ராகவேந்திரர் கோயிலில் நேற்று நடந்த பவுர்ணமி பூஜையில் சத்தியநாராயணா பூஜை நடந்தது. அதனையொட்டி காலை மிருத்திகா பிருந்தாவனத்தில் சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை ரகோத்தம ஆச்சார் தலைமையில் ரமேஷ் ஆச்சார், ராகவந்திரா ஆச்சார், கிரி ஆச்சார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராகவேந்திரர் படத்திற்கு சிறப்பு யாகம் நடந்தது. நிகழ்ச்சியில் புதுச்சேரி, சேலம், விருத்தாசலம், பெங்களூர், வேலூர், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.