திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :3839 days ago
கீழக்கரை: பங்குனி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்சவமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோயிலை சுற்றி நான்கு ரத வீதிகளிலும், தேர் வலம் வந்தது. நிறைவாக தீர்த்தம் தெளிக்கப்பட்டு, பக்தர்கள் கூட்டத்தில் கனிகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஏப்.,4) காலை 9 மணிக்கு ஆதிஜெகநாதப்பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் சேதுக்கரைக்கு சென்று தீர்த்தவாரி பூஜையில் பங்கேற்கின்றனர். பின்னர் கருட, ஆஞ்சநேய வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன், ஊராட்சி தலைவர் முனியசாமி பலர் பங்கேற்றனர்.