அழகர்கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் தரிசனம்!
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஸ்ரீதேவி, பூமாதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு சுந்தரராஜ பெருமாள் மங்கள நாண் அணிவித்து மாலை சூட்டினார்.இக்கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 31ல் காலை 10.30 மணிக்கு துவங்கியது. காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருமஞ்சணம் முடிந்து தீப ஆராதனை நடந்தது. நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் கோயில் பணியாளர்கள் ய்திருந்தனர்.கோயிலில் வழக்கமாக காலை 6 மணிக்கு நடை திறந்து பகல் 12.30 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மதியம் 3.30 மணிக்கு திறந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இன்று(ஏப்.4) சந்திரகிரகணம் என்பதால் காலை 6 மணிக்கு நடை திறந்து 11.30 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் இரவு 8 மணிக்கு திறந்து பூஜைகள் நடக்கும். அந்த நேரத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.