முத்தாம்பாளையத்தில் காவடி உற்சவவிழா!
ADDED :3955 days ago
விழுப்புரம்: முத்தாம்பாளையம் ஏரிக்கரை முருகன் கோவிலில், பங்குனிஉத்திர காவடிஉற்சவம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம், ஏரிக்கரையிலுள்ளவிநாயகர் மற்றும் கதிர்வேல்முருகன் கோவிலில், 48ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி உற்சவம்நடந்தது. காலையில் அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து செடல் உற்சவம், வேல் குத்திக்கொண்டு காவடி எடுத்து ஊர்வலம் மற்றும் தீமிதிவிழாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர்.