புற்று மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா
தியாகதுருகம்: பல்லகச்சேரி ஸ்ரீபுற்றுமாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா நடந்தது. தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீபுற்று மாரியம்மன் கோவில் தேர்திருவிழா முன் தினம் நேற்று நடந்தது.விழாவையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரவு அம்மன்வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் சக்திதேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் 118 பூந்தேரினை பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக இழுத்து சென்றனர். இதில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, ஊராட்சி தலைவர் அலமேலுஅருணாச்சலம், துணைத்தலைவர் வெண்ணிலாஆறுமுகம், மாரிமுத்து, கண்ணன், ஆறுமுகம், குமரவேல், மாணிக்கம், பூசாரிகள் சடையன், ஏழமலை, வி.ஏ.ஓ., அண்ணாமலை மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.