ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3838 days ago
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, காலை 9 மணிக்கு (ஏப்.4ல்) பங்குனி தேரோட்டம் நடந்தது. கடந்த 27ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை (ஏப்.4ல்) நடைபெற்றது. முன்னதாக தாயார் சன்னிதியில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருள, பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சித்திரை வீதிகளின் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.