உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவில் பங்குனி தேர் திருவிழா கோலாகலம்!

கைலாசநாதர் கோவில் பங்குனி தேர் திருவிழா கோலாகலம்!

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை யொட்டி தேர் திருவிழா நடந்தது. காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷப கொடி ஏற்றப்பட்டது. பின், விநாயகர், சுப்ரமணியர், கயிலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் புறப்பாடு நடந்தது. பின் நவசந்தி, யாக பூஜை தீபாரதனை நடந்தது. கடந்த 26ம் தேதி பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், கயிலாசநாதர் சூரிய பிரபை, சுந்தராம்பாள் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷபவாகனத்தில் வீதி உலா நடந்தது. திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. இதில் கலெக்டர் வல்லவன்,எஸ்.பி.,பழனிவேல்,வாரியத்தலைவர்கள் கோவிந்தராஜ், சுரேஷ்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,பொதுப்பணித்துறை கண்காணிப்பு அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் தேர்திருவிழாவை வடம்பிடித்து துவக்கிவைத்தனர். இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !