உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

சேத்தூர் : சேத்தூர் - மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.மருளாடி தினமும் அக்கினி சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 4,5 ம் திருநாட்களில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.7ம் திருநான்று பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் அம்மன் பூ சப்பரத்தில் வீதி உலா வந்தார்.விழா முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு பூ வளர்க்கப்பட்டு மாலை 6 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமானோர் ஆயிரங்கண் பானை,முளைப்பாரி எடுத்து வந்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை நிர்வாக குழு தலைவர் குருசாமி,செயலாளர் சமுத்திரம், பொருளாளர் மகேஷ்வரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. கோபால்சாமி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !