விருதுநகர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :3838 days ago
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா நேற்று நடந்தது. ஏராளமானோர் பொங்கலிட்டு வழிபட்டனர். இக்கோயில் பங்குனிப்பொங்கல் விழா மார்ச் 29 இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அம்மன் வாகனங்களில் வீதியுலாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. காலை முதலே ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு கோயிலில் அடுப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பராசக்தி அம்மன் தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.