உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுத்தமானது ஆஞ்சநேயர் கோயில்!

சுத்தமானது ஆஞ்சநேயர் கோயில்!

நிலக்கோட்டை: தினமலர் செய்தி எதிரொலியால் நிலக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோயில் சுற்றுப்புறம் சுத்தமடைந்துள்ளது.அணைப்பட்டி  ஆஞ்சநேயர் கோயில் சுற்றுப்புற பகுதியில், பாலிதீன் பைகள், டம்ளர்களை சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வீசிச்செல்வதால் சுகாதாரக்கேடு  ஏற்படுவதாக, தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டருக்கு நிலக்கோட்டை பக்தர் மூர்த்தி புகார் தெரிவித்தார். மார்ச் 30ல் ஆஞ்சநேயர் கோயில் குறித்த செய்தி  வெளியானது. இதனைத் தொடர்ந்து எஸ்.மேட்டுப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். இதனால்  ஆஞ்சநேயர் கோயில் சுற்றுப்புறம் தூய்மையானது. நிலக்கோட்டை பி.டி.ஓ., முனியாண்டி கூறுகையில்,“ பாலிதீன் கொண்டுவருவதை தடைசெய் துள்ளோம். தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கோயிலில் சுகாதாரம் பாதுகாக்கப்படும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !