காளியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா
அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் திரு விழா, நாளை நடைபெறுகிறது; 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெருமாநல்லூரில், புகழ்பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த 1ல் துவங்கியது. காலை 11:00 மணிக்கு, குண்டம் திறந்து பூ போடுதல்; 12:00க்கு, அன்னதானம்; இரவு 7:00க்கு, சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல்; 9:00க்கு, படைக்கல சாவடியில் பொங்கலிடுதல்; இரவு 10:00க்கு, குதிரையுடன் படைக்கலம் புறப்படுதல், நள்ளிரவு 1:00க்கு, பரிவார மூர்த்திகளான கன்னிமார் கருப்பராயன், முனீஸ்வரனுக்கு சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளன. நாளை அதிகாலை 4:00க்கு குண் டம் பூ மிதித்தல்; 8:00க்கு குண்டம் மூடுதல்; பகல் 12:00க்கு அன்னதானம்; 2:00க்கு சிறப்பு அபிஷேகம், சிம்ம வாகனத்தில், அம்மன் திருத்தேர் எழுந்தருளல்; 3:30க்கு, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.அவிநாசி டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில், பெருமாநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர், அவி நாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட இடங்களில் இருந்து, பெருமாநல்லூருக்கு, இன்று முதல் இரண்டு நாட்கள், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.