ராமேஸ்வரம் முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்!
ADDED :3841 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு வாசலில் அமைந்துள்ள முருகன் சன்னதியில் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. பங்குனி விழாவையொட்டி, ராமேஸ்வரம் கோயில் கிழக்கு வாசலில் அமைந்துள்ள முருகன் சன்னதியில், சுவாமிக்கு நேற்று முன்தினம் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கம் சார்பில் பால், பஞ்சமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த முருகப் பெருமானுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் யாத்திரை பணியாளர் சங்க தலைவர் முத்துகாமாட்சி, செயலாளர் சுந்தரம், மகேந்திரன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.