கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு நாடு வருகை விழா!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில், "நாடு வருகை விழாவையொட்டி பல்வேறு கோவிலை சுற்றிவந்தனர் ஆலவயல் நாட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா கடந்த, 15ம்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம் எடுத்து வந்தும், அம்மனுக்கு பூ சாத்தியும் வழிபட்டனர். 16ம் தேதி நடைபெற்ற அக்கினிக்காவடி விழாவில் கோயிலின் முன், வளர்க்கப்பட்ட அக்கினி குண்டத்தில் பக்தர்கள் காவடி மற்றும் பால்குடத்துடன் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து, 22ம்தேதி காப்புக்கட்டப்பட்டு தொடர்ந்து, 15 நாட்கள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடந்த, 5ம் தேதி பொங்கல் விழாவும், நேற்று, "நாடு ஊர்வலம வரும் விழாவும் நடைபெற்றது. விழாவில் பொன்னமராவதி, செவலூர், ஆலவயல், செம்பூதி உள்ளிட்ட ஊர்களை சார்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.இதில், ஆலவயல் நாடு ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசியும், பல்வேறு வேடங்களை பூண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில், ஒன்றியக்குழு தலைவர் அழகுசுப்பையா, கண்டியாநத்தம் ஊராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்கான பாதுகாப்பு பணிகளை டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையிலான போலீஸார் செய்தனர்.விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் உள்ளிட்டோர் செய்தனர்.