அழகன்குளம் அழகிய நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3952 days ago
பனைக்குளம்: அழகன்குளம் அழகிய நாயகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் முதல்கால யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் கண்ணமங்கலம் திருவேங்கடம் பட்டர், அழகன்குளம் முத்துகிருஷ்ணன் பட்டர் ஆகியோர் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது.