ரிஷிவந்தியத்தில் பங்குனி உத்திர தேர் திருவிழா!
ADDED :3855 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்தது. ரிஷிவந்தியத்தில் பங்குனி உத்திர தேர்திருவிழா கடந்த 1ம் தேதி கொடிஏற்றத்துடன் துவங்கியது. ஐயிராயிரம் குளக்கரையில் உள்ள விநாயகர் கோவில் அருகே நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்துதல், காவடி எடுத்தல், பூந்தேரினை இழுத்தல் போன்ற நேர்த்தி கடனை செலுத்தினர். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.