உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்கன், ருக்மணி திருக்கல்யாணம்!

பாண்டுரங்கன், ருக்மணி திருக்கல்யாணம்!

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு விட்டல் விஹார் மடத்தில் சுவாமிகள் பிரதிஷ்டாதின ஹோத்ஸவ விழாவை முன்னிட்டு ருக்மணி,  பாண்டுரங்கன்  திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இவ்விழா தோடய மங்கள குருகீர்த்தனைகள், நாம சங்கீர்த்தனத்துடன்  துவங்கியது.   முதல்நாள்  ராதாகிருஷ்ணா பஜனை மண்டலியாரின் கீர்த்தனம், துளசி பஜனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாள் அஷ்டபதியுடன் தொடங்கி  பஞ்சபதி, சாஸ்திரிய சங்கீதமும், மாலையில்  ருக்மணி, பாண்டுரங்கன் திருக்கல்யாணத்திற்கான மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நடந்தது.

இதில்  உற்சவராக எழுந்ருளிய பாண்டுரங்கன், ருக்மணி தாயார் இருவரும் வீதியுலாவாக சப்பரபவனி சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  பின்னர்  மீண்டும் மடத்திற்கு திரும்பிய பாண்டுரங்கசுவாமி காசியாத்திரை சென்றார்.  பக்தர்கள் அவரை வழிபாடு செய்து மீண்டும் மடத்திற்கு அழைந்து வந் தனர். மூன்றாம் நாள்  திருக்கல்யாண வைபவம் நடந்தது.   அதிகாலையில் சுவாமிக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார ப்பட்டு உடையில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து நலுங்கு வைபவமும், மாங்கல்ய பூஜைகளும் நடந்தது.  பின்னர் மணக்கோலத்தில் எழுந்தருளிய பாண்டுரங்க சுவாமி, மேளதாளங்கள் முழங்க ருக்மணித்தாயாருக்கு தாலி அணிவித்தார்.   பக்தர்கள் பூக்களைத்துõவி வழிபட்டனர்.    திவ்ய நாம வழிபாடு, தீபப்பிரதக்ஷணம், அன்னதானம் நடந்தது.   ஜெய்மாருதி பக்தசபாவினர் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !