தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் உற்சவ விழா: ஏப்.10ல் துவக்கம்!
மதுரை: தெப்பக்குளம் மாரியம்மன் உற்சவ விழா ஏப்.10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, மாரியம்மன் 9ம் தேதி வியாழக்கிழமை அன்று கோயிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சென்று தங்கி, மறுநாள் 10ம் தேதி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று கொடிப்பட்டம் பெற்று நான்கு சித்திரை வீதிகளில் சுற்றி முனிச்சாலை வழியாக தெப்பக்குளம் வந்து சேரும். அன்று இரவு 11.00 மணியளவில் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். தினந்தோறும் இரவு 7.00 மணிக்கு மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து அம்மன் புறப்பட்டு தெப்பக்குளம் சுற்றி திருக்கோயில் வந்தடையும். இரவு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
9.4.2015 (வியாழன்) மாலை 6.00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு எழுந்தருளல்
10.4.2015 (வெள்ளி) மாலை 6.00 மணிக்கு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இருந்து அருள்மிகு மாரியம்மன் கொடிபட்டம் பெற்றுக்கொள்ளுதல், இரவு 11 மணிக்கு கொடியேற்றம் மற்றும் சக்தி கரகம் எடுத்தல் முளைப்பாரி முத்து பதித்தல் நடைபெறும்.
11.4.2015 (சனி) இரவு 7.00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சுற்றி வலம் வருதல் அம்மன் புறப்பாடு
12.4.2015 (ஞாயிறு) 7.00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சுற்றி வலம் வருதல் அம்மன் புறப்பாடு
13.4.2015 (திங்கள்) இரவு 7.00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சுற்றி வலம் வருதல் அம்மன் புறப்பாடு
14.4.2015 (செவ்வாய்) இரவு 7.00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சுற்றி வலம் வருதல் அம்மன் புறப்பாடு
15.4.2015 (புதன்) திருவிளக்கு பூஜை மாலை 5.00 மணிக்கு அம்மன் தெப்பக்குளம் வலம் வருதல் இரவு 8.00 மணி
16.4.2015 (வியாழன்) இரவு 7.00 மணிக்கு அம்மன் தெப்பக்குளம் வலம் வருதல்
17.4.2015 (வெள்ளி) இரவு 8.00 மணிக்கு பூப்பல்லக்கு புறப்பாடு தீச்சட்டி பால்குடம் எடுத்து வலம் வந்து பூப்பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி தெப்பக்குளம் சுற்றி வருதல் இரவு அபிஷேகம் நடைபெறும்.
18.4.2015 (சனி) பிற்பகல் 3.00 மணிக்கு சட்டத்தேர், அம்மன் புறப்பாடு தெப்பக்குளம் வலம் வருதல்
19.4.2015 (ஞாயிறு) இரவு 9.00 மணிக்கு ஐராவதநல்லூர் மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்சவம் நிறைவு.