மழை வேண்டி அம்மனுக்கு கூழ்
ADDED :3919 days ago
சத்திரபட்டி: சத்திரபட்டி அருகே பி.ஆர்.ஆர்., நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் உலக அமைதிக்காகவும், மழை பெய்ய வேண்டியும் கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்றனர். பக்தர்களுக்கு காப்பு வழங்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன.