கோவை பிரசன்ன மகாகணபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :264 days ago
கோவை: மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் மூலவர் விநாயகப் பெருமான் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவர் விநாயக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.