வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடைதிறப்பு: நெய் அபிஷேகம் செய்து பக்தர்கள் பரவசம்
சபரிமலை: வைகாசி மாத பூஜைக்காக, நேற்று மே 14ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி நடையைத் திறந்து வைத்தார்.
சபரிமலை சன்னிதானத்தில் வைகாசி மாத பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மே 15 முதல் 19 வரை சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மாத பூஜைகள் நிறைவு பெற்று மே 19ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடி 10 மணிக்கு திவ்யத் திருநடை சாத்தப்படும். பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை சன்னிதானம் வரும் 25ம் தேதி மாலை 5 நடை திறக்கப்படும். வரும் மே 26ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடி 10 மணிக்கு திவ்யத் திருநடை சாத்தப்படும். இன்று ஐயப்பனை தரிசிக்க நீண்ட கியூ காணப்பட்டது. பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.