உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிக்கு பாதயாத்திரையாக வைகாசி விசாக பால்குட ஊர்வலம்

பழநிக்கு பாதயாத்திரையாக வைகாசி விசாக பால்குட ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாங்கரை கிராமத்தை சேர்ந்த பால தண்டபாணி தீர்த்த காவடி சங்கம் சார்பில் பக்தர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை 1 முதல் மாலை அணிந்து கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து பழநிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்தாண்டு வைகாசி விசாக திருவிழாவிற்கு செல்ல மாங்கரை அருகே உள்ள வீரப்புடையான்பட்டியில் ராமர் வந்து சென்ற இடமாக கருதப்படும் ராமர்பாதத்திற்கு மாங்கரையில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அங்கு தீர்த்தம் எடுத்து ராமர் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். 100க்கு மேற்பட்ட பக்தர்கள் ராம நாமம் பாடியபடி தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக மாங்கரை சித்தி, வெற்றி விநாயகர் கோயிலை அடைந்தனர். அங்கு மூலவர்களுக்கு அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து மாங்கரையில் இருந்து நாளை (மே 16) பழநிக்கு பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாங்கரையை சேர்ந்த முருகன், கருப்பு, ஆறுமுகம், ராஜா செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !