கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை
ADDED :9 hours ago
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள் பாலிக்கும் கதலி நரசிங்கப் பெருமாள் சுவாமிக்கு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோயில் வளாகத்தை 21 முறை சுற்றி வந்து கொடி மரத்திற்கு மலர் தூவி சுவாமியை வழிபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.