உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குன்னுார் : குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன், மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள சமயபுரம், மதுரைவீரன் கோவிலில் சீரமைப்பு பணிகள் முடிந்ததுடன், புதிதாக ஞான கணபதி, பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வரும்,14ம் தேதி குன்னுார் வி.பி., தெரு, சுப்ரமணியர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம், விக்னேஸ்வர பூஜை, அஞக்ஞை, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்பணம், ரட்ஷாபந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேஷம், துவாரபூஜை, மண்டப அர்ச்சனை, முதல் கால யாக மகா பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாத வினியோகம், மாலை, 6:30 மணிக்கு முதல் கால வேள்வி நடக்கின்றன. 15ம் தேதி காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, புண்ணியாகம், வேதிகா அர்ச்சனை, நாடிசந்தானம், யாத்ரா தானம், சங்கல்பம், மகா பூர்ணாகுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், கோபூஜை, தசதரிசனம் ஆகியவை நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !