சேந்தநாடு அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
ADDED :3850 days ago
உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. <உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் துவக்கமாக பரம்பரை அறங் காவலர் ராமசாமி தலைமையில், கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. கடந்த 3ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், இரவு வீதியுலா நடந்தது. தொடர்ந்து தினந்தோறும் 7ம் தேதி வரை இரவு சுவாமி வீதியுலாவும், 8ம் தேதி இரவு அரவாண் களபலியும், வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கோவில் வளா கத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ரதோற்சவம் நடந்தது. இன்று மாலை 5.30 மணிக்கு தீ மிதித்தலும், 11ம் தேதி மாலை மஞ்சள் நீர் உற்சவமும், 12ம் தேதி காலை பட்டாபிஷேகமும் நடக்கிறது.